இந்தியா

ஜி20 உச்சி மாநாடு: புதிய கழிவறைகள் கட்ட டெல்லி மாநகராட்சி திட்டம்

Published On 2022-12-25 08:48 GMT   |   Update On 2022-12-25 08:48 GMT
  • டெல்லியில் பல இடங்களில் பூங்காக்களை அழகுபடுத்தவும், மரங்களை ஒளிரச் செய்யவும் முடிவு.
  • சுற்றுலா தலங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மண்டலங்கள் முக்கியமானதாக தேர்வு.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி ஜி20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தனது ஐந்து மண்டலங்களில் புதிய கழிப்பறைகளை கட்டவும், பழைய கழிப்பறைகளை சரிசெய்யவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் பல இடங்களில் பூங்காக்களை அழகுபடுத்தவும், மரங்களை ஒளிரச் செய்யவும், பொது இடங்களில் கலைகள் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய சமுதாயக் கழிப்பறை வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பறைகள் கட்டுவதற்கான பணிகளும், பழையவற்றை சரிசெய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த புதிய கழிப்பறைகள், மாநகராட்சியின் கரோல் பாக், தெற்கு, மத்திய, ஷாஹ்தாரா தெற்கு மற்றும் நகர எஸ்பி ஆகிய ஐந்து மண்டலங்களில் பணி மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலா தலங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மண்டலங்கள் முக்கியமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News