15 வயது சிறுமி 3 ஆண்டுகளாக பலாத்காரம்- சென்னையில் தலைமறைவான வாலிபர் கைது
- அரசியல் செல்வாக்கு காரணமாக ஹபீஸ் பாஷா மீது போலீசார் சாதாரண வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
- அரசியல் கட்சி பிரமுகர்கள் ஹபீஸ் பாஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹபீஸ் பாஷா. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தினார்.
இதனால் சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஹபீஸ் பாஷாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் சிறுமி ஆஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அரசியல் செல்வாக்கு காரணமாக ஹபீஸ் பாஷா மீது போலீசார் சாதாரண வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
இந்தநிலையில் சிறுமிக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் களமிறங்கினர்.
அவர்கள் ஹபீஸ் பாஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் ஹபீஸ் பாஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து ஹபிஷ்பாஷா சென்னைக்கு தப்பி ஓடினார். போலீசார் அவரை தேடி வந்தனர்.
கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ஹபீஸ் பாஷாவை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஹபீஸ் பாஷாவை சஞ்சல்குடா ஜெயிலில் அடைத்தனர்.