VIDEO: சிக்னலில் நின்றதற்காக உணவு டெலிவரி ஊழியரை கொடூரமாக தாக்கிய வாலிபர்கள்
- காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர்.
- இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார்
பெங்களூருவில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு டெலிவரி ஊழியர் நேற்று இரவு மருத்துவமனை சந்திப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், ஹாரன் அடித்து, அவரை முன்னோக்கி நகர்த்துமாறு கோரினர்.
அதற்கு அந்த ஊழியர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதாக விளக்கியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர். அந்த நபர்கள், அவரை மீண்டும் மீண்டும் அடித்து உதைத்து வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இந்த தாக்குதல் குறித்து அவர் பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மது போதையில் இருந்ததாக கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
டெலிவரி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.