இந்தியா

பா.ஜ.க. வேட்பாளருக்காக டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்

Published On 2024-04-02 12:29 GMT   |   Update On 2024-04-02 12:29 GMT
  • மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • இதற்கான டெபாசிட் தொகையை மாணவர்களே திரட்டி பணம் செலுத்தினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் நிறைவடைகிறது. ஆற்றிங்கல் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், பழவங்காடி கணபதி கோயிலில் வழிபட்ட பின், தனது வேட்புமனுவை முரளீதரன் இன்று தாக்கல் செய்தார்.

அதற்கான டெபாசிட் தொகையை உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் செலுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

ரஷியா, உக்ரைன் போரின்போது அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு தாயகம் திரும்பி வர உதவியது. வெளியுறவுத்துறை இணை மந்திரியாக முக்கிய பங்காற்றிய முரளீதரனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை மாணவர்கள் செலுத்தினர்.

Tags:    

Similar News