இந்தியா
லக்னோவில் விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் ஏற்பட்ட தீப்பொறி - பயணிகள் பதற்றம்
- விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- விமானத்தை விமானி பாதுகாப்பாக தரையிறக்கியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சவூதியில் இருந்து 250 பயணிகளுடன் லக்னோ வந்த விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறிகள் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹஜ் பயணிகளுடன் வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தை விமானி பாதுகாப்பாக தரையிறக்கியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.