இந்தியா

அமேதி தொகுதியில் மட்டும் போட்டியிட தயாரா?: ராகுல் காந்திக்கு ஸ்மிரிதி இரானி சவால்

Published On 2024-02-20 02:56 GMT   |   Update On 2024-02-20 02:56 GMT
  • அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார்.
  • வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்’ என்று கூறினார்.

அமேதி:

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.

அங்கு மீண்டும் போட்டியிட தைரியம் உண்டா? என ராகுல் காந்திக்கு ஸ்மிரிதி இரானி சவால் விட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார். ராம் லல்லாவின் அழைப்பை அவரும் அவரது குடும்பமும் நிராகரித்தது. இதனால் அமேதி மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்' என்று கூறினார்.

அமேதியில் ராகுல் காந்தியின் யாத்திரையை வெறிச்சோடிய தெருக்கள்தான் வரவேற்றதாக கூறிய ஸ்மிரிதி இரானி, இதனால் சுல்தான்பூர் மற்றும் பிரதாப்கரில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை வரவழைத்து வந்திருப்பதாகவும் கிண்டல் செய்தார்.

Tags:    

Similar News