இந்தியா

குடியரசு தினவிழாவில் கர்நாடகா அலங்கார ஊர்திகள் புறக்கணிப்பு: சித்தராமையா குற்றச்சாட்டு

Published On 2024-01-09 16:08 GMT   |   Update On 2024-01-09 16:19 GMT
  • குடியரசு தினவிழாவில் கர்நாடக மாநில அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
  • விரோத மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது என முதல் மந்திரி குற்றம் சாட்டினார்.

பெங்களூரு:

தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இடம்பெற்று காண்போரைக் கவர்ந்திழுக்கும்.

இதற்காக மத்திய அரசு முன்கூட்டியே மாநிலங்கள் அனுப்பும் மாடல்களை பரிசீலனை செய்து விழாவில் இடம்பெறும் ஊர்திகளை தேர்வு செய்யும்.

இந்த ஆண்டு கர்நாடக மாநில ஊர்திகளைச் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் மாநில ஊர்திகளை சேர்க்க வேண்டும் என கர்நாடகா அனுப்பிய அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல் மத்திய அரசு கர்நாடகாவை அவமானப்படுத்தியது என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News