இந்தியா

செப்டம்பர் 9 துணை ஜனாதிபதி தேர்தல்.. ஆகஸ்ட் 21 வரை வேட்புமனு தாக்கல் - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2025-08-07 16:31 IST   |   Update On 2025-08-07 16:39:00 IST
  • வேட்புமனுக்கள் திரும்பப் பெற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்படும்.
  • அனைத்து எம்.பி.க்களும் இந்தத் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களிப்பார்கள்.

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆம் தேதி என அறிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் பரிசீலனை ஆகஸ்ட் 22 ஆம் தேதியும், வேட்புமனுக்கள் திரும்பப் பெற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்படும்.

வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும், வாக்கு எண்ணிக்கை அதே நாளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து எம்.பி.க்களும் இந்தத் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களிப்பார்கள்.

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஜூலை 21 ஆம் தேதி உடல்நலக் காரணங்களால் திடீரென ராஜினாமா செய்ததால் அந்தப் பதவி காலியானது குறிப்பிடத்க்கது.

Tags:    

Similar News