ராகுல் காந்தி முகத்தில் கருப்பு மை பூசுவோம்: உத்தவ் சிவசேனா கட்சி நிர்வாகி மிரட்டல்
- சாவர்க்கரைப் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துகள் அவமானகரமானது.
- ராகுல் காந்தி நாசிக் வந்தால் அவரது முகத்தில் கருப்பு மை பூசுவோம் என்றார்.
மும்பை:
காங்கிரஸ் கட்சியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனாவும் தேசிய அளவில் இந்தியா கூட்டணி மற்றும் மகாராஷ்டிர அளவில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
இதற்கிடையே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, சுதந்திரப் போராட்ட வீரர் வீரசாவர்க்கரை 'மாபிவீர்' (மன்னிப்பு கேட்கும் வீரர்) என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியின் நாசிக் நகரப்பிரிவு துணைத்தலைவர் பாலா தராதே, வீர சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சாவர்க்கரைப் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துகள் அவமானகரமானது. அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி நாசிக் வந்தால் அவரது முகத்தில் கருப்பு மை பூசுவோம். அதைச் செய்ய முடியாவிட்டால், அவரது வாகன பேரணி மீது கற்களை வீசுவோம். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் என்னவாக இருந்தாலும், அதைப்பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.