இந்தியா
நவராத்திரியை ஒட்டி மத்தியபிரதேச தலைநகரில் இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை
- வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் நவராத்தி விழா கொண்டாடப்படுகிறது.
- விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது. வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில்,மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் நவராத்திரி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரியானா மாநிலம் குருகிராமிலும் இதே போன்ற தடையை விதிக்க வேண்டும் என அப்பகுதியின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.