இந்தியா

மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..

Published On 2024-10-10 10:03 IST   |   Update On 2024-10-10 19:33:00 IST
2024-10-10 07:28 GMT

ரத்தன் டாடாவின் மறைவு குறித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், "இந்தியாவின் தொழில் வளர்ச்சியின் மகத்தான முன்னோடி ரத்தன் டாடா. நாட்டின் மிகப்பெரிய சொத்தாக, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பல வழிகளில் பங்களித்தவர் என்று கூறினார்.


2024-10-10 07:19 GMT

ரத்தன் டாடாவின் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு என்று மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வதேட்டிவார் கூறியுள்ளார்.

 

2024-10-10 07:07 GMT

மகாராஷ்டிரா அமைச்சரவையில் மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

2024-10-10 06:57 GMT

ரத்தன் டாடா உடலுக்கு மகாராஷ்டிர அமைச்சர் உதய் சமந்த் அஞ்சலி செலுத்தினார்.

2024-10-10 06:50 GMT

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ராஜ் தாக்கரே.

2024-10-10 06:44 GMT

ரத்தன் டாடா மறைவுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

2024-10-10 06:33 GMT

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு குறித்து, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், "இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. நாடு அவரை எப்போதும் மிஸ் செய்யும். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

2024-10-10 06:25 GMT

ரத்தன் டாடாவின் மறைவு குறித்து ஷைனா என்சி கூறுகையில், "ரத்தன் டாடா ஜி இந்தியாவின் ரத்தினம். மக்களுக்குத் தெரியாத மூன்று அம்சங்கள் உள்ளன. முதலில் அவரது எளிமை, இரண்டாவது அவரது பெருந்தன்மை, மூன்றாவது அவரது கருணை என்று கூறினார்.

2024-10-10 06:11 GMT

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொழிலதிபர் ரத்தன் டாடாவை நினைவு கூர்ந்தார்.

2024-10-10 06:09 GMT

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இறுதி அஞ்சலி செலுத்தினார்

Tags:    

Similar News