இந்தியா

மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..

Published On 2024-10-10 10:03 IST   |   Update On 2024-10-10 19:33:00 IST
2024-10-10 06:06 GMT

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

2024-10-10 05:58 GMT

ரத்தன் டாடாவுடனான தனது நினைவுகளை நினைவு கூர்ந்து உணர்ச்சி வசப்பட்டார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

2024-10-10 05:34 GMT

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா.

2024-10-10 05:16 GMT

இந்தியாவும் உலகமும் மாபெரும் இதயம் கொண்ட ஒரு மாபெரும் மனிதரை இழந்துவிட்டன என்று ரத்தன் டாடா மறைவுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

2024-10-10 05:15 GMT

ரத்தன் டாடாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்

2024-10-10 05:07 GMT

தேசிய கொடி போர்த்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிப்பு

2024-10-10 05:00 GMT

தொழில்துறையின் தலைவரான ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் என நேபாள பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2024-10-10 04:58 GMT

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் தள பதிவில், "இந்திய வரலாற்றில் நீடித்த பாரம்பரியம் கொண்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. கேரளாவின் வளர்ச்சிக்கு அவரது அசைக்க முடியாத ஆதரவு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தாருக்கும், டாடா குழுமத்திற்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள் என கூறியுள்ளார்.

2024-10-10 04:55 GMT

நேர்மையும் எளிமையும், எப்போதும் பிறர் மீது அக்கறையும், கருணையும் கொண்டவர். நான் உண்மையில் அவரை மிஸ் செய்கிறேன் ... என்று ரத்தன் டாடா மறைவு குறித்து ராஜ்ய சபா எம்பியான சுதா மூர்த்தி கூறியுள்ளார்.

2024-10-10 04:50 GMT

ரத்தன் டாடா மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News