மக்கள் உங்கள் மீது எறியும் கற்களை எடுத்து ஒரு நினைவுச்சின்னம் கட்ட பயன்படுத்துங்கள் - ரத்தன் டாடா
மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
- பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
- ரத்தன் டாடா சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது.
இந்தநிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.
பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். 2012-ல் அவர் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.
உயிரிழந்த ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
உயிரிழந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு பொது மக்கள் வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர்.
இறுதி சடங்குகளை செய்வதற்காக ரத்தன் டாடா உடல் மயானம் எடுத்துவரப்பட்டது.
உயிரிழந்த ரத்தன் டாடா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் வொர்லி சுடுகாட்டிற்கு வந்துள்ளார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு குஜராத் அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நடிகர் ஆமிர் கான், இயக்குநர் கிரன் ராவ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா உடலுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்தார்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் ரத்தன் டாடா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ரத்தன் டாடா உடலுக்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.