இந்தியா

தெருநாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள் - கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

Published On 2025-08-15 13:13 IST   |   Update On 2025-08-15 13:13:00 IST
  • கடை ஒன்றில் கேக்கிற்கு நாயின் பெயர் 'எல்தோ கேக்' என்றே பெயரிட்டுள்ளனர்.
  • 14 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து எல்தோ என்ற தெருநாய் வாழ்ந்துள்ளது.

டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த உத்தரவை வரவேற்றுள்ள நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கேரளா மாநிலம் கொழிவெட்டும்வெலி பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்த எல்தோ என்ற தெருநாய்க்கு ஊர் மக்கள் சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த நாய்க்கு பாலில் செய்த கேக் மிகவும் பிடிக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கேக்கிற்கு 'எல்தோ கேக்' என்றே பெயரிட்டுள்ளனர்.

Tags:    

Similar News