மோசடி செய்து ரூ.4,843 கோடி லாபம்.. தூங்கும் SEBI - கண்களை மூடிய மோடி அரசு - ராகுல் காந்தி தாக்கு
- ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய பங்குச்சந்தையில் , ஜனவரி 2023 முதல் மே 2025 வரையிலான காலகட்டத்தில், பங்குகள், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தைகளில் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டி, குறியீடுகளை கையாண்டு லாபம் ஈட்டியதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கண்டறிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "செபி இவ்வளவு காலம் ஏன் அமைதியாக இருந்தது? மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.
ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தை பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதாகவும், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாகவும் 2024-ஆம் ஆண்டிலேயே தான் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.