இந்தியா
மக்களை பாதுகாப்பது பிரதமர், உள்துறை அமைச்சரின் பொறுப்பல்லவா?- பிரியங்கா காந்தி கேள்வி
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
- மத்திய அரசின் பேச்சை நம்பிச் சென்றவர்கள் கொல்லப்பட்டதுதான் மிச்சம்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது இந்தியாவின் முப்படைகளின் தீரத்திற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
* காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக மத்திய அரசு கூறியது.
* காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
* காஷ்மீரில் தீவிரவாதம், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியதை நம்பியே மக்கள் சுற்றுலா சென்றனர்.
* மத்திய அரசின் பேச்சை நம்பிச் சென்றவர்கள் கொல்லப்பட்டதுதான் மிச்சம்.
* குடிமக்களின் பாதுகாப்பு பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பல்லவா?
இவ்வாறு அவர் கூறினார்.