இந்தியா

ரஷிய அதிபர் புதினுடன் போனில் பேசிய பிரதமர் மோடி.. இந்தியாவுக்கு வருகை தர அழைப்பு!

Published On 2025-08-08 19:47 IST   |   Update On 2025-08-08 19:47:00 IST
  • எனது நண்பர் அதிபர் புதினுடன் மிகவும் சிறப்பான மற்றும் விரிவான உரையாடலை நடத்தினேன்.
  • உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

ரஷியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார் 

இதற்கிடையே ரஷியா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் புதின் இந்தியா வர உள்ள தகவலை நேற்று உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று, ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதுதொடர்பாக மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், எனது நண்பர் அதிபர் புதினுடன் மிகவும் சிறப்பான மற்றும் விரிவான உரையாடலை நடத்தினேன்.

உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். எங்கள் இருதரப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம்.

மேலும் இந்தியா-ரஷியா சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.  

Tags:    

Similar News