இந்தியா

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து.. சசி தரூர் சிலாகிப்பு!

Published On 2025-06-24 03:15 IST   |   Update On 2025-06-24 03:15:00 IST
  • இந்தியாவின் நடவடிக்கைகள் தற்காப்புக்கான ஒரு சட்டபூர்வமான செயல்
  • செயற்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்து கட்சிக்கு எதிராக செயல்படுவதற்குச் சமம்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளார். மோடியின் ஆற்றலும் சுறுசுறுப்பும் இந்தியாவின் முக்கிய சொத்துக்கள் என்று சசி தரூர் கூறினார்.

தி இந்துவில் சசி தரூர் எழுதிய கட்டுரையில், உலக அரங்கில் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அவருக்கு நிறைய ஆதரவு தேவை. ஒற்றுமையின் சக்தியிலும், தகவல் தொடர்பு சக்தியிலும் மோடி மிகவும் முன்னேறி இருப்பதாக சசி தரூர் புகழ்ந்துரைத்தார்.

ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி குறிப்பிட்ட சசி தரூர், இந்தியாவின் நடவடிக்கைகள் தற்காப்புக்கான ஒரு சட்டபூர்வமான செயல் என்றும், இந்தியா தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு மட்டுமே பதிலடி கொடுத்து வருவதாகவும் சசி தரூர் கூறினார். இதை வெளிநாடுகளுக்கு விளக்க முடிந்ததாக அவர் கூறினார்.

இதற்கிடையே கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசின் உத்தரவின் பேரில் மூன்று நாடுகளின் தூதரகப் பணிக்காக சசி தரூர் புறப்பட்டதில் காங்கிரஸ் தலைமை மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளது.

தரூரின் செயல்களை, செயற்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்து கட்சிக்கு எதிராக செயல்படுவதற்குச் சமம் என்று தலைமை கருதுகிறது.

இருப்பினும், இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது என்பதும், தரூர் தனது சொந்த முடிவை எடுக்க அனுமதிப்பதும் கட்சியின் தற்போதைய நிலைப்பாடாகும். கட்சி, நடவடிக்கை எடுத்து தரூரை பெரிது பண்ணாது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News