இந்தியா

தசரா விழா முன்னிட்டு பயிற்சி- பீரங்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Published On 2023-10-23 06:01 GMT   |   Update On 2023-10-23 06:46 GMT
  • மைசூர் அரண்மனையில் தசரா விழாவுக்காக பீரங்கி பயிற்சி.
  • பயிற்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு.

கர்நாடக மாநிலம், மைசூருவில் ஆண்டுதோறும் தசரா விழா நடைபெறுவது வழக்கம்.

தசரா விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மைசூரு அரண்மனை, மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், முக்கிய வீதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுதவிர தசரா ஊர்வலம் தொடங்கும் அரண்மனை முதல் பன்னிமண்டபம் நடைபெறும் 5 கிலோ மீட்டர் தூரம் வழிநெடுகிலும் உயர் கோபுரங்கள் அமைத்தும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மைசூர் அரண்மனையில் தசரா விழாவுக்காக பீரங்கி பயிற்சி நடைபெற்றது. அப்போது, பீரங்கியில் குண்டு வெடித்தபோது அருகே இருந்த ஊழியர் மீது நெருப்பு பிடித்து படுகாயம் அடைந்தார்.

அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பயிற்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News