இந்தியா

பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க சுதந்திர தினம் - அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Update: 2022-07-04 18:49 GMT
  • அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினம் அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தில் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அமெரிக்க மக்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News