இந்தியா

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடம் பிடித்தார் பிரதமர் மோடி

Published On 2023-12-09 05:20 GMT   |   Update On 2023-12-09 05:20 GMT
  • உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
  • ஏற்கனவே நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.

புதுடெல்லி:

உலகின் மிக பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

தி மார்னிங் கன்சல்ட் தகவலின்படி உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 76 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 2வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூரஸ் மானுவல் லோபஸ் 66 சதவீதம், சுவிட்சர்லாந்து அதிபர் அலெய்ன் பெர்சட் 58 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

4வது இடத்தில் பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா 49 சதவீதத்துடனும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 சதவீதத்துடன் 7-வது இடத்திலும் நீடிக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பிலும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News