இந்தியா

79வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் இன்று கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி

Published On 2025-08-15 02:43 IST   |   Update On 2025-08-15 02:43:00 IST
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
  • டெல்லி செங்கோட்டையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றன.

புதுடெல்லி:

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

டெல்லியில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும். விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

டெல்லி செங்கோட்டையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அலங்காரமும் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் 5,000 பேர் நாடு முழுவதிலும் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர்டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், பாராகிளைடர்கள், வெப்பக் காற்று பலூன்கள் உள்ளிட்டவை பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையவழி அச்சுறுத்தல், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக ஊடகங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News