இந்தியா

பிரதமர் மோடி பிரேசில் அதிபருடன் தொலைபேசியில் பேச்சு

Published On 2025-08-08 01:27 IST   |   Update On 2025-08-08 01:27:00 IST
  • இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
  • பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரேசிலிய பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள சூழ்நிலையில், இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது

Tags:    

Similar News