இந்தியா

இந்தியாவை பிரபலப்படுத்துவதில் சினிமா வெற்றி பெற்றுள்ளது- பிரதமர் மோடி பேச்சு

Published On 2025-05-01 13:29 IST   |   Update On 2025-05-01 13:29:00 IST
  • வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.
  • வேவ்ஸ் உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது.

முதலாவது உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு மும்பையில் இன்று நடந்தது. பிரதமர் மோடி வேவ்ஸ் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், புதுமையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒரே குடையின் கீழ் கூடியுள்ளனர். திறமை மற்றும் படைப்பாற்றல் கொண்ட உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நாங்கள் அடித்தளம் அமைத்து வருகிறோம்.

வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.

வேவ்ஸ் உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது. இந்தியா கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதோடு பில்லியன் கணக்கான கதைகளின் பூமியாகவும் உள்ளது.

இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றிப்பெற்றுள்ளது. இந்தியாவில் உருவாக்கு, உலகத்துக்காக உருவாக்கு என்பதற்கு இதுவே சரியான நேரம்.

இவ்வாறு மோடி பேசினார்.

இந்திய சினிமாவில் 5 பிரபரலங்களின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். குருதத், பி.பானுமதி, ராஜ் கோஷ்லா, ரித்விக் கடக், சலீம் சவுத்ரி ஆகியோர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது.

இந்த மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன், மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்னாவிஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், மோகன்லால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News