கடந்த 3-4 ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன: பிரதமர் மோடி
- மும்பையை உலகளாவிய ஃபின்டெக் தலைநகராக மாற்றுவதுதான் எனது நோக்கம்.
- தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மட்டுமே ஸ்திரத்தன்மையை வழங்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடி இன்று மும்பையில் சாலை, ரெயில்வே மற்றும் துறைமுகம் துறையில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், சில திட்டங்களை திறந்தும் வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
வரவிருக்கும் கட்டமைப்பு திட்டங்கள் மும்பை அருகில் உள்ள பகுதிகளின் இணைப்பை அதிகரிக்கும். உற்சாகத்துடன் சிறிய மற்றும் பெரிய முதலீட்டார்கள் 3-வது முறையாக அமைந்துள்ள அரசாங்கத்தால் வரவேற்கப்படுகிறார்கள்.
மும்பையை உலகளாவிய ஃபின்டெக் தலைநகராக மாற்றுவதுதான் எனது நோக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மட்டுமே ஸ்திரத்தன்மையை வழங்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு தேவை. இதை நோக்கி எங்கள் அரசாங்கம் செயல்படுகிறது. இந்தியாவில் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை வேலைவாய்ப்பு தொடர்பாக போலியான கதைகளைப் பரப்புபவர்களை வாயடைக்கச் செய்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.