இந்தியா

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு புதிய தொடக்கம்: பிரதமர் மோடி

Published On 2023-12-17 20:58 IST   |   Update On 2023-12-17 20:58:00 IST
  • வாரணாசியின் நமோ கட் பகுதியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • கன்னியாகுமரி, வாரணாசி இடையிலான காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நமோ கட் பகுதியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய மீன்வள துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையேயான காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வழியே புதிய தொழில்நுட்ப பயன்பாடு இன்று நடைபெறுகிறது. இது ஒரு புதிய தொடக்கம். இதனால், உங்களை என்னால் எளிதில் அடைய முடிகிறது.

விருந்தினர்கள் என்றளவில் இல்லாமல், நீங்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றளவில் வந்திருக்கின்றீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் இருந்து காசிக்கு வருவது என்றால் அதற்கு மகாதேவரின் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு வருவது என பொருள். அதனாலேயே தமிழகம் மற்றும் காசிக்கு இடையேயான பிணைப்பு என்பது சிறப்பானது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் பேச்சு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பார்வையாளர்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

Tags:    

Similar News