இந்தியா

பிரதமரை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி அழுத நபர் -ஆறுதல்படுத்திய மோடி

Published On 2025-03-08 10:54 IST   |   Update On 2025-03-08 12:36:00 IST
  • சூரத்தில் உணவுப் பாதுகாப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • மோடி மற்றும் அவரது மறைந்த தாயின் புகைப்படங்களை கையில் ஏந்தி இளைஞர் தேம்பித் தேம்பி அழுதார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயின் புகைப்படங்களை கையில் ஏந்தி உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி அழுதார்.

இதை பார்த்த மோடி, இளைஞரின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி கையெழுத்திட்டு, இளைஞருக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனையடுத்து, சூரத்தில் உணவுப் பாதுகாப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News