இந்தியா

சந்தேஷ்காலி விவகாரத்தில் ராஜாராம் மோகன் ராய் ஆத்மா வேதனை அடைந்துள்ளது: பிரதமர் மோடி

Published On 2024-03-01 10:51 GMT   |   Update On 2024-03-01 10:51 GMT
  • மேற்கு வங்காளத்தின் அரம்பாக் பகுதியில் பா.ஜ.க. சார்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • அப்போது சந்தேஷ்காலி பெண்களின் மரியாதை, கண்ணியத்திற்காக பா.ஜ.க. தலைவர்கள் போராடினர் என்றார்.

கொல்கத்தா:

பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்தின் அரம்பாக் பகுதியில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை நாடு பார்க்கிறது. இதனால் நாடு முழுவதும் கொதிப்படைந்துள்ளது.

சந்தேஷ்காலியில் நடந்த சம்பவத்தால் சமூக சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்திருக்க வேண்டும்.

ஒரு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எல்லா வரம்புகளையும் கடந்தார். மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் இங்குள்ள பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்காக போராடினர். போலீசார் நேற்று அவரை கைதுசெய்ய வேண்டியிருந்தது என தெரிவித்தார்.

Tags:    

Similar News