இந்தியா

உ.பியில் பிக்-அப் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

Published On 2023-11-17 19:33 IST   |   Update On 2023-11-17 19:33:00 IST
  • விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சேடகான்-மிடார் சாலையில் இன்று அதிகாலையில் பிக்-அப் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலை 8 மணியளவில் வாகனம் பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (நைனிடால்) பிரஹலாத் நாராயண் மீனா தெரிவித்தார்.

எதிர்திசையில் வந்த மோட்டார் பைக்கை இடிக்காமல் செல்ல முயன்றபோது வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு தம்பதியும் அவர்களது மகனும் ஆவர்.

விபத்தில் காயமடைந்த இருவர் ஓகல்கண்டாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் இருந்து ஹல்த்வானியில் உள்ள உயர் மருத்துவ வசதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

Tags:    

Similar News