இந்தியா
null

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் பாராளுமன்றம் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

Published On 2025-07-28 11:43 IST   |   Update On 2025-07-28 12:25:00 IST
  • பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார்.
  • மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் தொடக்கம். பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார்.

16 மணிநேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில், பீகார் வாக்காளர் பட்டியலில் நடத்தப்படும் தீவிர சிறப்பு திருத்தம் குறித்து விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 

Tags:    

Similar News