இந்தியா
"போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.." இந்திய ராணுவம் விளக்கம்
- இந்த தாக்குதல் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் கூறப்பட்டது.
- இந்திய ராணுவம் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
இதன்மூலம் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய ராணுவம் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "பூஞ்ச் பகுதியில் போர்நிறுத்த மீறல்கள் குறித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் எந்த போர்நிறுத்த விதிமீறலும் நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.