இந்தியா
null

Video: ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்?

Published On 2025-05-12 22:01 IST   |   Update On 2025-05-12 22:03:00 IST
  • ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) இடையேயான பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்தது.

அதில், இரு தரப்பிலும் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்து பேசப்பட்டு, இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

எல்லைகளில் படை வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் வெடிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் ட்ரோன்கள் ஊடுவருவல் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News