இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பாகிஸ்தான் கருத்து குறித்து உமர் அப்துல்லா பதில்..!

Published On 2025-04-26 14:47 IST   |   Update On 2025-04-26 15:48:00 IST
  • பாகிஸ்தான் கருத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை.
  • என்ன நடந்ததோ அது துரதிருஷ்டவசமானது. இது நடந்திருக்கக் கூடாது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.

குறிப்பாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா எங்கள் மீது பழி போடுகிறது. நாங்கள் நடுநிலையான விசாரணையில் பங்கேற்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

முதலில் பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் கூறியது. எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு இப்போது அதைப்பற்றி எதுவும் சொல்வது கடினம். அவர்களின் கருத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. என்ன நடந்ததோ அது துரதிருஷ்டவசமானது. இது நடந்திருக்கக் கூடாது.

இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்த்ளளார்.

Tags:    

Similar News