இந்தியா

Pahalgam Attack: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்!

Published On 2025-04-24 10:55 IST   |   Update On 2025-04-24 10:55:00 IST
  • 2019 புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் இதுவாகும்.
  • சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு ஆகியவை இதில் அடங்கும்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

2019 புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் இதுவாகும். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு ஆகியவை இதில் அடங்கும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது.

இந்நிலையில் பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசு அறிவுறுத்தல் பேரில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News