இந்தியா

யாரையும் பழிவாங்க முயற்சிக்கவில்லை.. அகமதாபாத் விமான விபத்து வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Published On 2025-11-13 21:20 IST   |   Update On 2025-11-13 21:20:00 IST
  • இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர்.
  • சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.

 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை யாரையும் பழிவாங்கும் முயற்சி அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர். ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்துக்கு விமானி மீது குற்றம்சாட்டப்படுவதாக விமான விபத்தில் இறந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

விசாரணையில் விமானிகள் மீது குற்றம் சாட்ட வாய்ப்புள்ளதாகக் குற்றம் சாட்டிய தந்தை, விசாரணை நடத்த சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸுக்கு மத்திய அரசு தற்போது இவ்வாறு பதிலளித்துள்ளது.

இந்நிலையில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜெயமல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற விசாரணையின் நோக்கம், துயரத்திற்கான காரணத்தைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுப்பதும் ஆகும் என்றும், தனிநபர்கள் மீது பழி சுமத்துவதோ அல்லது யார் தவறு செய்தார்கள் என்று சொல்வதோ அல்ல என்றும் கூறியது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தரத்தின்படி விசாரணை நடத்தப்படுவதாகவும், விசாரணை யாரையும் பழிவாங்க முற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

Tags:    

Similar News