யார் ஆதரவும் தேவை இல்லை.. முதல்வர் நாற்காலி பற்றி டி.கே.சிவகுமார் ஓபன் டாக்
- அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாரை பரிசீலிக்க வேண்டும்.
- பொறுப்பை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்
கர்நாடகாவில் முதல்வரை மாற்ற கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவகுமார், உடனடியாக முதல்வராகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், 2028 சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் காங்கிரஸை வலுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறினார்.
இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், "கட்சியும் ஒழுக்கமும் முக்கியம். நாடு முழுவதும், அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களையும் வலுப்படுத்த விரும்புகிறோம். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்டும் பொறுப்பை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்," என்று கூறினார்.
அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாரை பரிசீலிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கருத்து குறித்து கேட்டபோது, "யாருடைய ஆதரவும் தனக்கு தேவையில்லை என்றும், தற்போது முதல்வர் நாற்காலியை நோக்கிப் இருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
அடுத்த தேர்தலிலும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதே தனது முன்னுரிமை என்று கூறினார். கர்நாடகாவில் தலைமை மாற்றத்திற்கான திட்டம் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் தெளிவுபடுத்தினார்.