இந்தியா

அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா, பாகிஸ்தான் பரிமாற்றம்

Published On 2026-01-02 02:31 IST   |   Update On 2026-01-02 02:34:00 IST
  • இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை வாயிலாக பரிமாறிக் கொள்ளப்படும்.

புதுடெல்லி:

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலான மோதலின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதே இதன் நோக்கம்.

அதன்படி, தங்கள் நாடுகளில் இருக்கும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் ஒவ்வொரு ஆண்டும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது 1991-ம் ஆண்டு ஜனவரி 27 முதல் அமலுக்கு வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி இந்தப் பட்டியல் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்.

இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் மத்திய வெளியவுறவுத்துறை அமைச்சகமும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்தப் பட்டியல்களை ஒப்படைத்தன. தொடர்ந்து 35-வது ஆண்டாக பரஸ்பரம் பட்டியல் பகிரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News