இந்தியா

யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை: சரத் பவார்

Published On 2024-06-04 15:40 IST   |   Update On 2024-06-04 15:40:00 IST
  • பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
  • சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரிடம் சரத் பவார் பேசியதாக தகவல் வெளியானது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையே, சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள சரத் பவார் டெலிபோன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிதிஷ் குமாரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துணை பிரதமர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சரத் சந்திரா தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்

கூறுகையில், நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் ஆதரவு அளிக்கும்படி நான் பேசவில்லை. உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. சிறிதளவே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News