இந்தியா

ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்

Published On 2025-06-06 13:04 IST   |   Update On 2025-06-06 13:04:00 IST
  • அதிகப்படியான பைகள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
  • பட்டப்படிப்பு படிக்காமலேயே மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் அவரது திறமையை பலரும் பாராட்டினர்.

மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் செய்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.

பிரபல நிறுவனமான லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல்ரூபானி தனது லிங்க்டு -இன் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த வாரம் விசா விண்ணப்பிக்க அமெரிக்க தூதரகம் சென்றேன். அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பையை என்னிடம் தாருங்கள். நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்கு ரூ.1,000 கட்டணம் என்றார். முதலில் நான் தயங்கினேன். ஆனாலும் வேறு வழியின்றி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றேன். பிறகு தான் தெரிந்தது. இது அற்புதமான வணிகம் என்று. அந்த டிரைவர் தினமும் 20 முதல் 30 பேரின் உடமைகளை தனது ஆட்டோவில் பாதுகாக்கிறார்.

இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்று கருதுகிறேன். ஆட்டோ ஓட்டாமலேயே அவர் நன்றாக சம்பாதிக்கிறார் என பதிவிட்டுள்ளார். மேலும் அதிகப்படியான பைகள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த போலீஸ் அதிகாரிக்கு சிறிய லாக்கர் வசதி இருக்கிறது. இதனால் பைகளை பாதுகாப்பாக வைத்து கொடுக்கிறார் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். பட்டப்படிப்பு படிக்காமலேயே மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் அவரது திறமையை பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News