இந்தியா

மக்களவையில் கடும் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

Published On 2026-02-03 15:20 IST   |   Update On 2026-02-03 15:20:00 IST
  • மாணிக்கம் தாகூர் உள்பட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.
  • மீதமுள்ள இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க இயலாது.

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கம் தாகூர் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், சு. வெங்கடேசன் உள்பட மற்ற எதிர்க்கட்சிகளை சேர்ந்த 3 எம்.பி.க்களும் இதில் அடங்குவர்.

சபாநாயகரை நோக்கி பேப்பரை கிழித்து எறிந்ததாக இவர்களுக்கு எதிராக கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த 9 பேரும் மீதமுள்ள இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.

Tags:    

Similar News