9 எம்.பி.க்கள் இடைநீக்கம்: மக்களவையில் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
9 எம்.பி.க்கள் இடைநீக்கம்: மக்களவையில் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
Published on

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த விவகாரம் மக்களவயில் இன்று பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் இந்த விவகாரம் குறித்து பேச முற்பட்டது, அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சியினருக்கு மக்களவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியை சேர்ந்த 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தொடர் முடியும் வரை பங்கேற்க முடியாது.

இதையடுத்து, மக்களவையில் இருந்து 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிரா்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற பாாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகர வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோலே, எஸ். வெங்கடேசன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் அடங்குவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com