இந்தியா
மசூலிபட்டினத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் மோன்தா புயல்..!
- காக்கிநாடாவில் இருந்து தெற்கு- தென்மேற்கே 150 கி.மீ. தொலைவில் புயல் உள்ளது.
- விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்மேற்கே 250 கி.மீ. தொலைவில் உள்ளது.
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் மசூலிபட்டினம்- காக்காநாடாவை ஒட்டியுள்ள கலிங்கபட்டினம் இடையே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மோன்தா புயல் மசூலிபட்டடினத்திற்கு தெற்கு- தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தெற்கு- தென்மேற்கே 150 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்மேற்கே 250 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்மேற்கே 480 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மசூலிபட்டடினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.