இந்தியா
மோன்தா புயல் கரையை கடக்க தொடங்கியது: மழையுடன் பலத்த காற்று வீசி வருகிறது
- புயலின் மையக்கரு 7.30 மணியளவில் மசூலிபட்டினத்தில் இருந்து தெற்கு- தென்கிழக்கு 20 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது.
- தற்போதைய நிலையில் புயல் கரையை கடக்க தொடங்கியது.
வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று 7.30 மணியளவில் மோன்தா புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது. தற்போது புயலின் மையம் (கரு) மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது. முழுமையாக கரையை கடக்க 3-4 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடந்த பின், சூறாவளியாக மாறி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுவிழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.