இந்தியா
அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
- பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசினார்.
- பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு வர்த்தக உறவு பற்றி பேசினர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு வர்த்தக உறவு பற்றி பேசினர்.
வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் இருநாடுகளின் உறவை இன்னும் விரிவுப்படுத்துவது பற்றி இருவரும் விவாதித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் டிரம்புடன் சுவாரஸ்மான உரையாடலை மேற்கொண்டேன். உரையாடல் சிறப்பானதாக இருந்தது. இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் பற்றி பேசினோம். பிராந்தியம் மற்றும் சர்வதேச நிலவரங்கள் பற்றி இருவரும் விவாதித்தோம். உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என பதிவிட்டுள்ளார்.