நிகழ்காலத்தை பற்றி பேசாமல் 2047 கனவை விற்பனை செய்யும் மோடி அரசு - ராகுல் ஆதங்கம்
- பிரச்சாரத்தை மட்டுமே செய்து வருகிறது.
- பாதுகாப்பின்மை மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறிவிட்டது.
மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு தனது 11 ஆண்டுகால ஆட்சியில் பொறுப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும், பிரச்சாரத்தை மட்டுமே செய்து வருவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு நிகழ்காலத்தைப் பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு 2047 பற்றிய கனவுகளை விற்று வருகிறது என்று அவர் விமர்சித்தார்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நெரிசலான உள்ளூர் ரயிலில் இருந்து விழுந்து நான்கு பயணிகள் இறந்தனர். இதை சுட்டிக்காட்டி, இன்று மோடி ஆட்சி 11 ஆண்டு நிறைவை ராகுல் 'எக்ஸ்' இல் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.
மோடி அரசு 11 ஆண்டுகால ஆட்சியை கொண்டாடும் வேளையில், மும்பையில் இருந்து வரும் சோகச் செய்திகள் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன என்று ராகுல் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே கோடிக்கணக்கான மக்களின் முதுகெலும்பாக இருப்பதாகவும், ஆனால் இன்று அந்த நிறுவனம் பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாடு இன்று கடந்து வரும் கடினமான சூழ்நிலைகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.