இந்தியா

மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால்

ஆயுர்வேதம் உலகளவில் அறியப்படுவதற்கு பிரதமரின் தொடர் முயற்சியே காரணம்- மத்திய மந்திரி பேச்சு

Published On 2022-10-23 19:04 GMT   |   Update On 2022-10-23 19:04 GMT
  • ஆயுர்வேத துறையில் சில முக்கிய ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • ஆயுர்வேத சிகிச்சை நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .

7வது ஆயுர்வேத தினம் நேற்று இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் நடத்திய நான் ஆயுர்வேதத்தை ஆதரிக்கிறேன் என்ற பிரச்சாரத்திற்கு 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 


நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுர்வேதத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால், கூறியதாவது: ஆயுர்வேதம் என்பது நோயைத் தடுக்கும் அறிவியல், இது ஒரு பண்டைய கால அறிவு பொக்கிஷம். ஆயுர்வேத துறையில் சில முக்கிய ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும், அதன் நன்மைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.தற்போது உலகளவில் ஆயுர்வேத முறை அறியப்படுவதற்குக் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான, அயராத முயற்சிகள் தான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா, ஆயுர்வேத சிகிச்சை இந்தியாவின் பண்டைய கால பாரம்பரிய சொத்து. மழைவாழ் மக்களுடன் இணைந்து ஆயுர்வேத சிகிச்சை முறையை மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.ஆயுர்வேதம், மற்ற சிகிச்சைகளை போல நோய்வாய்ப்பட்ட பிறகு சிகிச்சை பற்றி விவாதிப்பது இல்லை. நோய் வருவதை தடுப்பதைப் பற்றி பேசும் மருத்துவ விஞ்ஞானம் ஆயுர்வேதம் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News