வீடியோ- எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பை காட்டி பணம் பறித்த நபர்: பதறிய பயணிகள்
- மத்திய பிரதேச மாநிலத்தில் பாம்புடன் ஒருவர் ரெயிலில் ஏறியுள்ளார்.
- திடீரென பாம்பை காட்டி பணம் வசூலிக்க தொடங்கியதால், பயணிகள பயத்தில் உறைந்தனர்.
அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மத்திய பிரதேச மாநிலம் வழியாக வந்துள்ளது. அப்போது மங்காலி (Mungaoli) என்ற ரெயில் நிலையத்தில் ஒருவர் ஏறியுள்ளார். ரெயில் புறப்பட்டதும், அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பை வெளியே எடுத்துள்ளார். இதனால் பயணிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
பாம்பை காட்டி பயணிகளிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பயந்துபோய், பணம் கொடுத்துள்ளனர். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலான அதே நேரத்தில், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த கொண்ட அந்த நபர் மீது ரெயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ எடுத்த நபர், ரெயில்வேக்கும் புகார் அளித்துள்ளார். அதற்கு ரெயில்சேவா எக்ஸ் பக்கத்தில், ஆர்.பி.எஃப்.-க்கு உத்தரவிட மேலும், விரிவான விவரங்களை பகிரவும் எனவும் பதில் அளித்துள்ளது. அத்துடன் "உங்களுடைய பயண விவரங்கள் (PNR/ UTS no.) மற்றும் செல்போன் நம்பர் எங்களுக்கு தேவைப்படும். DM வழியாக முன்னுரிமை அளிக்கப்படும். உங்களுடைய புகாரை http://railmadad.indianrailways.gov.in இதன் மூலம் அனுப்பலாம் அல்லது விரைவாக தீர்வு பெற 139 நம்பருக்கு டயல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.