இந்தியா

சட்டசபைக்கு வந்த முதல்வர் ஷிண்டே

மகாராஷ்டிர சட்டசபையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்த ஷிண்டே அணி

Update: 2022-07-03 06:08 GMT
  • மகாராஷ்டிராவில் இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.
  • ஷிண்டே தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பை

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு, பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து ஷிண்டே தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. இதற்காக காலையிலேயே சட்டசபைக்கு வந்த ஷிண்டே அணியினர், சட்டசபை கட்சி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். 'சிவசேனா சட்டமன்றக் கட்சியின் அறிவுறுத்தலின்படி அலுவலகம் மூடப்பட்டுள்ளது' என வெள்ளை பேப்பரில் எழுதி கதவில் ஒட்டினர்.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று அரசுக்கான ஆதரவை தெரிவிப்பதற்காக ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் மும்பை வந்து சேர்ந்தனர். சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிடுகின்றனர். நாளை அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 

Tags:    

Similar News