மாத சம்பளம் ரூ.15,000... சொத்து மதிப்பு ரூ.30 கோடி - அரசு ஊழியரின் ஊழல் அம்பலம்
- சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
- ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
கர்நாடகாவில் மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கி வந்த அரசு ஊழியரிடம் இருந்து, ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் முன்னாள் எழுத்தராக பணியாற்றிய கலக்கப்பா நிடகுண்டியின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுவரையிலான சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம், 1 கிலோ தங்கம், மூன்றுக்கும் மேற்பட்ட கார், பைக், ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
அரசு ஊழியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக என லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர்.