இந்தியா

டெல்லி நோக்கி வந்த லடாக் போராட்டக்காரர்கள் எல்லையில் கைது.. தடை உத்தரவு அமல் - ராகுல் கண்டனம்

Published On 2024-10-01 11:23 IST   |   Update On 2024-10-01 11:23:00 IST
  • நேற்று இரவு டெல்லியை நெருங்கும்போது சிங்கு [Singhu] எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
  • டெல்லியில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல சூழலியல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் உட்பட தலைநகர் டெல்லியை நோக்கி லடாக்கில் இருந்து பாதயாத்திரை பேரணியாக டெல்லியை நோக்கி வந்த 120 பேர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

லாடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், பழங்குடியின பகுதிகளில் நில பாதுகாப்பு மற்றும் சுயேச்சை உறுதி செய்ய அரசியலமைப்புச் சட்டத்தின் 6 ஆவது அட்டவணையில் லடாக்கினை சேர்க்க வேண்டும், மத்திய அரசு லடாக்கிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்திவரும் சோனம் வாங்சுக் லடாக் மக்கள் ஆதரவுடன் தொடர் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பாதயாத்திரை தொடங்கிய வாங்சுக் நாளை [அக்டோபர் 2] காந்தி ஜெயந்தி அன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் பேரணியை மமடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நேற்று இரவு டெல்லியை நெருங்கும்போது சிங்கு [Singhu] எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருடன் வந்த 120லடாக் போராளிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தம் .. தடை உத்தரவு அமல் - ராகுல் கண்டனம்

 உடன் அவர் தடுப்புக்காவலில் வைகைப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லியில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாங்சுக் மற்றும் நூற்றுக்கணக்கான லடாக்கியர்களை தடுப்புக்காவலில் வைத்துள்ளதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். லடாக்கின் எதிர்காலத்திற்காக போராடினார்கள் என்பதற்காக ஏன் முதியவர்களையும் காவலில் வைத்துளீர்கள் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, விவசாயிகள் எப்படி தங்களின் போராட்டம் மூலம் மோடியின் சக்கவியூகத்தை உடைத்தார்களோ அதே போல மீண்டும் அது உடையும், உங்களின் அகந்தையும்தான், லடாக்கின் குரலுக்கு நீங்கள் செவி சாய்த்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News